மூன்று நிறமிகளின் துணை கொண்டே வண்ணங்களின் கலவையான உலகினை நம் கண்கள் காட்டுகிறன. வண்ணங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு நிகர் அவர்களே தான். அவர்கள் அணியும் உடைகளும், அணிகளுமே அதற்குச் சான்று. எப்படி பெண்களால் மட்டும் மிகவும் ஒரே வண்ணத்தின் இருவேறு சாயல்களை மிகவும் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது? இங்குப் பார்ப்போம்!!
"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"
"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"
"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்"
என்னங்க? உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா?
வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்!
வண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:
சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும் இருக்கும்.
ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது?
மனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.
நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.
பெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.
கொசுறுத் தகவல்:
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!

நிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா?)
நண்பர்களே! இந்த பதிவினைப் பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதியுங்கள்... மேன்மேலும் பதிவை மேம்படுத்த உதவுங்கள்! இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால், வலைத்திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து, பிறரும் காண வழிசெய்திடுங்கள்!!
நிறங்களில் இத்தனை விடயம் இருக்கிறதா? தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குபாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள்.மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல விளக்கங்கள் ! நன்றி நண்பரே!
பதிலளிநீக்குUseful post about colours...
பதிலளிநீக்குபடித்து கருத்து கூறிய தங்கம் பழனி, மணிகண்டன், திண்டுக்கல் தனபாலன் மற்றும் Advocate PRJ ஆகியோருக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணே
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு